தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் “விடாமுயற்சி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த “விடாமுயற்சி” படம் திடீரென நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற்று சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.
பின்னர் பைக் ரைடு சென்ற அஜித், தனது அடுத்த படத்தை “குட் பேட் அக்லி” என்று அறிவித்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இதுவரை அவர் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது, இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி டியோல் நடிக்க இருப்பதாக தகவல்கள்
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் பாபி டியோல், சமீபத்தில் வெளியான “அனிமல்” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், சர்ச்சைகளை சந்தித்தது.
தற்போது சூர்யாவின் “கங்குவா” படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி டியோல், அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதியானதாக இல்லை என்றாலும், அஜித் மற்றும் பாபி டியோல் இணைந்து நடிக்கும் காட்சிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 1 ஆம் தேதி ரீலிஸ் தேதி உடன் விடாமுயற்சி படத்தின் முதல் டீசர் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
