விடாமுயற்சி அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூல் சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் முடிவடைந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத் குமார் நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் முற்றிலும் நரைத்த தோற்றத்துடன் காணப்பட்டார்.விடாமுயற்சி அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் படம். இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
துணிவு படத்திற்கு பிறகு அஜித் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இது எப்போது முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வருடமாகவே இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது படத்தை சீக்கிரமே முடித்து ரிலீஸ் வேண்டும் என்ற முடிவில் படக்குழு இருக்கிறது.
இதன் ஷூட்டிங் தற்போது அஜர்பைஜான் நாட்டில் தீவிரமாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தினமும் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாக்குகிறார். இந்த புகைப்படங்கள் எல்லாம் தல ரசிகர்களை ஆரவாரப்படுத்துகிறது.
அதிலும் இப்போது அஜித், ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஷெல்பி அவர்களின் லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு நிச்சயம் விடாமுயற்சியில் அஜித் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.ஹாலிவுட் லுக்கில் அஜித்தின் வைரல் புகைப்படம்
அஜித்தின் இந்த புது லுக் புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. இதில் ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஷெல்பி அணிந்திருக்கும் கேப் மற்றும் கோட் சூட் உடன் அவரைப் போலவே தெரிகிறார். ஹாலிவுட்டில் இவர் நடிக்கும் பல கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கை வரலாற்று நபர்களை அடிப்படையாகக் கொண்டவை.
அதேபோன்று விடாமுயற்சி படத்திலும் அஜித்தின் கதாபாத்திரம் இருக்குமோ! என்றும் ரசிகர்கள் யூகிக்கின்றனர். எது எப்படியோ விடாமுயற்சி படம் தல ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கப் போகிறது என்பது அஜித்தின் லுக்கை பார்த்ததுமே கன்ஃபார்ம் செய்து விட்டனர்.
இந்நிலையில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் first look பற்றிய லேட்டஸ்ட் லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது அது என்னவென்றால் வரும் 24 ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் என தகவல் கிடைத்துள்ளது
