Tuesday, February 24, 2026

யப்பா.. போடுடா வெடிய 🔥 அலப்பறை ஆரம்பம்​ !!விடாமுயற்சி படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா..

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரோட் ஆக்‌ஷன் மூவியாக உருவாகும் விடாமுயற்சி படத்தில், அஜித் – ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இருவருமே மிரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மங்காத்தா படத்தில் மாஸ் காட்டிய இக்கூட்டணிக்கு, விடாமுயற்சி இன்னும் ஸ்பெஷலாக இருக்குமாம்.

ADVERTISEMENT

படப்பிடிப்பின் நடுவே, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரை ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தியும் அஜித் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் ‘அர்ஜுன்’ எனத் தெரிய வந்துள்ளது. ரியல் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் விடாமுயற்சியில் நடித்து வரும் போது, அவரது பெயர் கொண்ட கேரக்டரில் அஜித் நடித்து வருகிறார்.

இதனால் விடாமுயற்சி படத்தில் மேலும் சில சர்ப்ரைஸ் சம்பவங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது வரை இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க விடாமுயற்சி படக்குழு ரெடியாகிவிட்டதாம். இன்னும் ஓரிரு மாதங்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் என்றும், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி ரிலீஸுக்குப் பின்னர் தான் இந்த அப்டேட்கள் அபிஸியலாக வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிப்பது இது மூன்றாவது முறையாகும். மங்காத்தா மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.

விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT