Tuesday, February 24, 2026

ஒட்டு மொத்த திரையுலகமே காத்திருந்த விடாமுயற்சி படத்தை பற்றி வெளியான அசத்தல் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் நடித்து வரும் “விடா முயற்சி” படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதன் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் “விடா முயற்சி” என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த நவம்பர் 23ம் தேதி நடந்த இந்த விபத்தில், அஜித் ஓட்டிய கார், வேகமாக சென்று, ஸ்கிட் ஆகி, பள்ளத்தில் கவிழ்ந்தது. படக்குழுவினர் பதறி ஓடி வந்து அஜித்தை பார்த்தபோது, அவர் ஹம்மர் கார் என்பதால் பெரிதாக பாதிக்கப்படாமல் இருந்தார்.

இந்த விபத்து குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியதாவது:

“அந்த சீன்ல கார் வேகமா போகும் போது யாரும் எதிர்பாரத விதமா கார் அப்படியே ஸ்கிட் ஆகிடுச்சு. ரோட்டுல இருந்து உருண்டு பள்ளத்துல கவிழ்ந்திடுச்சு. மொத்த யூனிட்டுமே பதறிப் போய் அஜித் சாரை நோக்கி ஓடினாங்க.

அஜித் சார் ஓட்டின வண்டி ஹம்மர் கார் என்பதால், அவருக்கு பெரிசா எந்தப் பாதிப்பும் இல்லாமல் காரிலிருந்து வெளியே வந்துட்டார். வந்ததும் உடனே மெடிக்கல் செக்கப்பும் செய்து, ஒண்ணும் ஆகலைன்னு தெரிந்த பிறகு ஷுட்டிங்கையும் தொடர்ந்திருக்கார்.

இந்த வீடியோ இப்ப வெளியிட காரணமிருக்கு. ஏன்னா, இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறாங்க. ஆனா, பலரும் படம் டிராப் ஆகிடுச்சுனு சொல்றப்ப, அதில் உழைத்த அத்தனை பேருக்கும் மனசு கஷ்டமா இருக்கு. அதனால ரசிகர்களுக்கும் படத்தோட டீமுக்கும் மனத் தெம்பையும் உற்சாகமும் அளிக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டோம்.”

“விடா முயற்சி” படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தேர்தல் முடிந்த அடுத்த நாளே, வெளிநாடு பறக்கிறது யூனிட். படத்தை அக்டோபர்ல வெளியிடத் திட்டமிட்டிருக்காங்க!”

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT