நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நாளை முதல் மீண்டும் துவங்குகிறது.
ஆக்ஷன் திரில்லராக எடுக்கப்பட்டுவரும் விடாமுயற்சி படத்தில் இதுவரை அதிகமாக ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கடந்த சில தினங்களாக நடத்தப்படாமல் இருந்தது.
புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் தன்னுடைய மகள் அனௌஷ்காவின் பிறந்தநாள் போன்ற காரணங்களுக்காக லண்டன் சென்றிருந்தார் அஜித்குமார். இதனால் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடந்துவந்த விடாமுயற்சி சூட்டிங் கடந்த சில தினங்களாக இடைவெளி எடுத்துக் கொண்டது.
இந்நிலையில் படத்தின் சூட்டிங் நாளை முதல் மீண்டும் துவங்கப்பட்டு இடைவெளி இல்லாமல் நடத்தப்பட உள்ளதாகவும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்யவும் படக்குழு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படம் தடம், தடையற தாக்க உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. அதிகமாக ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகிவரும் இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
