சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார் நயன்தாரா. அந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் எட்டிய நிலையில் ரொம்பவே ஹேப்பி ஆகியுள்ளார்.
அடுத்ததாக, யூடியூப்பின் மூலம் பிரபலமான பிரபலமான டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. அந்தப் பக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன் லவ் டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், நயன்தாரா புதிதாக ஸ்கின் கேர் அழகு சாதன பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளார். எவ்வளவு தான் சினிமா, பிசினஸ் என படுபிஸியாக இருந்தாலும் தங்களது உயிர் மற்றும் உலகத்துடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவதற்கும் ஏகப்பட்ட நேரத்தை ஒதுக்கி வருகின்றனர்.
சமீபத்தில், குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா தங்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவு அடைந்ததையும் கொண்டாடியிருந்தார். இந்நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.