விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் இந்த மாதம் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. இந்தப் படத்தை ஆனந்த கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, ஆத்மிகா நடித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக திரையரங்குகளில் இந்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இந்தப் படத்தின் கதாநாயகி ஆத்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஹரிஷ் அர்ஜூன் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். இந்தப் படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று, மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.