தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவரான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், நேற்று (29ஆம் தேதி) நடிகர் விஜய் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அஞ்சலி செலுத்தும்போது விஜய் கண்ணீர் விட்டு அழுதார். இதுவரை பொது இடத்தில் நாம் யாரும் விஜய்யை இப்படி பார்த்ததில்லை. அவரது உடைந்துபோன முகம் பார்க்கவே மனது பதறியது.
அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட விஜய் கூட்ட நெரிசலில் கஷ்டப்பட்டார். அப்போது, எங்கிருந்தோ ஒரு செருப்பு வந்து விஜய்யின் காலில் பட்டது. இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால், சிலர் விஜயகாந்தின் தொண்டர்கள் விஜய்யை தாக்கியதாக கூறினர். ஆனால், இது முற்றிலும் தவறான தகவல். விஜயகாந்தின் தொண்டர்கள் அனைவரும் விஜய்யை தளபதி என்று பாசத்துடன் அழைத்தனர். மேலும், விஜய்யை செருப்பால் தாக்கியது போல் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் சினிமா உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தியுள்ளது. அவரது மறைவால் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயை செருப்பால் அடித்த கேப்டன் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள்
எதுக்கு இப்படி பண்ணாங்க 🤔🤔🤔🤔#RIPCaptainVijayakanth #RipCaptain#Vijayakanth pic.twitter.com/XdaSE8fioG
— Natarajan (@natarajan333) December 28, 2023
