தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘பீஸ்ட் ‘ இன்று (ஏப்ரல் 13) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள படம் ‘பீஸ்ட் ‘. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட் ‘ பாக்ஸ் ஆபிஸில் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் பாடல் திரையில் தோன்றும் போது வேற லெவலில் ரசிகர்கள் இருப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் உண்மையாகவே திரை தீப்பிடித்துள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படம் மிகவும் சுமாராக இருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து தியேட்டரின் திரைக்கு தீ வைத்ததாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Frustrated Vijay fans firing Theatres Screens #BeastDisaster
— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) April 13, 2022
திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் விஜய் ரசிகர்கள் எல்லைமீறி இருப்பதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.