ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ’ஜெயம்’ என்ற படத்தில் தான் நடித்ததாகவும் அந்த படத்தில் நடிக்க எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய ’இறைவன்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் புரோமோஷன் விழா நேற்று நடைபெற்ற போது அதில் ஜெயம் ரவி உட்பட குழுவினர்கள் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி உள்பட சிலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசிய போது ’இறைவன்’ படத்தின் தலைப்பு தனக்கு பிடித்திருப்பதாகவும் அடுத்த படத்தின் தலைப்பான ‘ஜனகணமன’ அதைவிட நன்றாக பிடித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
நான் முதலில் நடித்த படத்திற்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள் என்றும் ஜெயம் ரவியின் ’எம் குமரன்’ என்ற படத்தில் நான் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தேன். அந்த காட்சிக்காக எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார். மேலும் நான் பார்த்து ரசித்த முதல் ஹீரோ ஜெயம் ரவி தான் என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து ஜெயம் ரவி பேசியபோது ’நான் ஒருவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நினைத்த ஹீரோ விஜய் சேதுபதி தான் என்றும், உங்களை வைத்து ஒரே ஒரு படமாவது நிச்சயம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை என்றும் தெரிவித்தார். மேலும் அன்பு பல பேருக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை, இறைவன் என்றாலே அன்பு தான், 100 பேருக்கு சோறு போட்டு பாருங்கள், சிறிய உதவி செய்து பாருங்கள், உங்களுக்கு இறைவன் தெரிவார். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் ’இறைவன்’ என்று ஜெயம் ரவி கூறினார்.