நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜெஷான் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
கதாநாயகன் யார் என்பது குறித்து பல யூகங்கள் நிலவி வருகின்றன. விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் துருவ் விக்ரம் உடனும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
ADVERTISEMENT
இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஜெஷான் கதை கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், சிவகார்த்திகேயன் தனக்கு கதை பிடிக்கவில்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ADVERTISEMENT
