விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விஜய் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறதாம்.
விஜய் அஞ்சலி செலுத்துவிட்டு திரும்பிச் செல்லும் போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அதிர்ச்சியடைந்தார். விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த சம்பவத்தைப் பார்த்து கொந்தளித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில், தேமுதிக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய, விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸ்சி ஆனந்திடம் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் அனுமதி கேட்டனர். இதனை விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றார் புஸ்சி. விஜய்யோ, “அந்த தவறை செய்ய வேண்டம் ” என்று சொன்னதன்பேரில், அனுமதி தரப்படவில்லை.
விஜய்காந்த் எனக்கு தொடக்க காலத்தில் ஆதரவாக இருந்தார். அவர் போன பின் இப்படி செய்தால் சரியாக இருக்காது. அதனால் அமைதியாக இருங்கள் என்று விஜய் கூறிவிட்டாராம். இருப்பினும் அந்த சம்பவம், விஜய்யின் மனதை அரித்துக்கொண்டே இருந்துள்ளது. செருப்பு வீச வேண்டிய அளவுக்கு நம் மீது தேமுதிகவினருக்கு என்ன கோபம் என்று கேட்டுக் கொண்டே இருந்தாராம் விஜய்.
இந்த நிலையில், செருப்பு வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கோயம்பேடு காவல் நிலையத்தில் இன்று புகார் தெரிவித்திருக்கிறார் விஜய் மக்கள் இயக்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் அப்புனு என்பவர். விஜய்யின் அனுமதி இல்லாமல் இப்படி கொடுக்க அவரது இயக்கத்தின் முன் வரமாட்டார்கள் என்பதால், இந்த புகார் தகவல், அரசியல் ரீதியாகவும் சீனிமா ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் விஜயகாந்திற்கு மரியாதையை செலுத்திய போது மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். அதோடு வெளிப்படையாக அவர் உணர்ச்சிகளை காட்டியது கவனம் பெற்றது. விஜயகாந்த் இருந்த பாக்ஸ் மீது தலையை வைத்து அங்கேயே அவர் கண்ணீர்விட்டார்.
அப்படியே உடைந்து போய் விஜயகாந்த் முகத்தை பார்த்துக்கொண்டே.. உறைந்து போய் நின்றார். மிகவும் உணர்ச்சிகரமாக அவரின் முகம் காணப்பட்டது. ஐஸ் பாக்ஸ் மீது அப்படியே முகத்தை வைத்தப்படி சோகத்தின் உருவாகவே இருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இன்னொரு பக்கம் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை அவர் சிகிச்சை பெறும் போது நடிகர் விஜய் சந்திக்க முயன்றதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் போது அவரை சந்திக்க விஜய் முயன்று உள்ளார். ஆனால் விஜயகாந்த் குடும்பத்தினர் இதற்கு அனுமதிக்கவில்லை.
விஜய் பார்க்க வந்தால்.. மற்றவர்களும் பார்க்க வருவார்கள். இதனால் சிகிச்சை பாதிக்கப்படும். சிகிச்சையில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் விஜயகாந்தை அவர் சிகிச்சை பெறும் போது நடிகர் விஜய் சந்திக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மற்ற சினிமா நட்சத்திரங்கள் சிலர் முயன்ற போதும் கூட இதே பதில்தான் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த செயல்கள், அவரது நெகிழ்வான குணத்தை வெளிப்படுத்துகின்றன. அவர் ஒரு உண்மையான ரசிகர் என்பதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது.
