ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி ஒரு தனித் தீவில் நடந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். கரடு முரடான காட்டில் அவர்களுக்கு கடினமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வெற்றி பெற்றிருக்கிறார்.
91 நாட்கள் போட்டியிட்ட பிறகு விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. சர்வைவரில் விஜய்யின் தம்பி விக்ராந்த் சந்தோஷ், நடிகர் நந்தா, சரண், லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, காயத்ரி, இந்திரஜா சங்கர், விஜே பார்வதி உள்பட 17 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் நடித்துவந்த நடிகை விஜயலட்சுமி திருமணம் முடிந்து குடும்பத்துடன் செட்டில் ஆனார். இதனால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான விஜயலட்சுமி சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். விஜயலட்சுமி கடினமான டாஸ்குகளை செய்த விதத்தை பார்த்து பார்வையாளர்கள் இம்பிரஸ் ஆனார்கள். விஜயலட்சுமியை சூப்பர் அம்மா என்று ரசிகர்களும் சுட்டிகளும் அழைக்கதொடங்கினர்.
சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று வீடு திரும்பிய விஜயலட்சுமியை குடும்பத்தார் அன்புடன் வரவேற்று வாழ்த்தியிருக்கிறார்கள்.
முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் விஜயலட்சுமி. அதில் அவருக்கு டைட்டில் கிடைக்காத போதிலும் சர்வைவரில் வெற்றி பெற்றிருக்கிறார். தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்திருக்கிறார் விஜயலட்சுமி.