Friday, February 20, 2026

வரிசையில் காத்திருந்த முதியவர் அஜித்திடம் வாக்குவாதம் வைரல் வீடியோ!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சென்னை: இன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் காலை 7 மணிக்கு முன்பே வரிசையில் நின்று வாக்களித்தார்.

இந்த சூழ்நிலையில், அஜித்தை வாக்களிக்க முன் வரிசையில் காத்திருந்த ஒரு முதியவர் காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

முதியவரின் வாக்குவாதம்:

“நான் சீனியர் சிட்டிசன். எனக்கு முன்னுரிமை கொடுக்காமல், அஜித்தை ஏன் உள்ளே அனுப்புகிறீர்கள்? என்னை உள்ளே அனுப்புங்கள்,” என்று அந்த முதியவர் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார்.

காவல்துறையினரின் பதில்:

சில நிமிடங்கள் கழித்து, அஜித் வாக்களித்து வந்தவுடன் உங்களை அனுப்புகிறேன் என்று காவல்துறை அதிகாரி சமாதானம் செய்தார்.

வைரல் வீடியோ:

இருப்பினும், அந்த முதியவர் காவல்துறை அதிகாரியிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரபரப்பு:

ஒரு கட்டத்தில் அந்த முதியவர், “அஜித்தை வெளியே அனுப்புங்கள். என்னை வாக்களிக்க உள்ளே அனுப்புங்கள்,” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு:

தற்போது அந்த முதியவர் யார் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT