ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான “எல் கிளாசிக்கோ” போட்டி நாளை மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி:
இரு அணிகளும் தற்போது புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
சென்னை 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 3வது இடத்திலும், மும்பை 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.
எனவே, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு வெளியே முதல் வெற்றி தேவை:
சென்னை அணி தனது ஹோம் மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டிகளிலும் வென்றுள்ளது.
ஆனால், சென்னைக்கு வெளியே நடந்த 2 போட்டிகளிலும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தது.
எனவே, சென்னை அணிக்கு வெளியே முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற அவசியம் உள்ளது.
மும்பை மீண்டும் பழைய கடப்பாரை அணியாக உருவெடுத்துள்ளது:
மும்பை அணி தொடரின் ஆரம்பத்தில் 3 தோல்விகளை சந்தித்தது.
ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளை வீழ்த்தி மீண்டும் பழைய கடப்பாரை அணியாக உருவெடுத்துள்ளது.
வான்கடேவில் மும்பைக்கு சாதகமான சூழ்நிலை:
வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு நல்ல ரெக்கார்ட் உள்ளது.
இரு அணிகளும் வான்கடேவில் 11 முறை மோதி உள்ளன. இதில் 7 முறை மும்பையும், 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் 36 முறை நேர் நேர் மோதி உள்ளனர். அதில் மும்பை அணி 20 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ஆடுகளம் எப்படி இருக்கும்?
வான்கடே மைதானத்தில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
பெரும்பாலான போட்டிகள் 7வது ஆடுகளத்தில் நடைபெற்றுள்ளன.
இந்த ஆடுகளத்தில் ஸ்கொயர் பவுண்டரிகள் 63 மீட்டர் மற்றும் 65 மீட்டராக இருக்கும். நேர்திசையில் பவுண்டரிகள் 74 மீட்டரில் இருக்கும்.
இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.
யார் வெற்றி பெறுவார்கள்?
டாஸை வெல்லும் அணிக்கு பாதி வெற்றி என்பது வான்கடேவில் அதிகம் பேசப்படும் ஒன்று.
பனியின் தாக்கம், மும்பையின் பேட்டிங் டெப்த் ஆகியவற்றை பார்க்கும்போது சிஎஸ்கே அணியும் டாஸை வெல்லவே பார்க்கும்
