சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள பிரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.
பல டப்பிங் தெலுங்கு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும் இந்த பிரின்ஸ் திரைப்படம் தான் நேரடியாக அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.