Monday, February 23, 2026

என்னை அறிந்தால் பார்ட் 2 பற்றிய ரகசியத்தை வெளிப்படையாக கூறிய அருண்விஜய்.!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண்விஜய். இவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமான முறை மாப்பிள்ளை மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமி, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்தார்.

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அருண்விஜய், தனது வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு படங்கள் என்னை அறிந்தால் மற்றும் தடையறத் தாக்க ஆகியவை என்று கூறினார். இந்த இரண்டு படங்களையும் பார்ட்-2 பண்ண வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT

அருண்விஜய் கூறுகையில், “என்னை அறிந்தால் படத்தில் விக்டர் இறந்தாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அந்த படத்தின் முடிவில் விக்டரை சுட்டதை நீங்கள் யாரும் பார்க்கவில்லை. அங்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. தல அஜித் அதற்கான வாய்ப்பை கொடுத்தால் என்னை அறிந்தால் 2 எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறினார்.

அருண்விஜய்யின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னை அறிந்தால் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் படமாக கருதப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் பட்சத்தில் அது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT