Wednesday, October 28, 2026

அனிருத் – ஆண்ட்ரியா காதல் முறிவு பற்றி வெளிப்படையாக கூறிய அனிருத்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இசையமைப்பாளர் அனிருத், தன்னுடைய முன்னாள் காதலி நடிகை ஆண்ட்ரியாவுடன் ஏன் பிரிந்தார் என்பதை பற்றி முதல் முறையாக பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “3” படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்ததன் மூலம் ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அனிருத், “3” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ADVERTISEMENT

இருவரும் காதலித்து வந்ததாக 2016-ல் கிசுகிசுக்கள் எழுந்தன. அப்போது, இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் மற்றும் லிப்-கிஸ் புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தன்னுடைய முதல் காதல் முறிவுக்கு வயதுதான் காரணம் என அனிருத் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

“என்னுடைய முதல் காதல் 19 வயதில் தொடங்கியது. அப்போது எனக்கு 19, ஆண்ட்ரியாவுக்கு 25 வயது. எங்கள் காதல் தோல்விக்கு முக்கிய காரணம், ஆண்ட்ரியாவுக்கும் எனக்கும் இடையேயான வயது வித்தியாசம்தான். இதனால் எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை. நாங்கள் பிரிந்து விட்டோம்.”

அனிருத் – ஆண்ட்ரியா காதல் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர், வயது வித்தியாசம் காதலுக்கு ஒரு தடையல்ல எனவும், வேறு காரணங்களால் தான் அவர்கள் பிரிந்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்றவர்கள், அனிருத் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டது தைரியமான செயல் என பாராட்டியுள்ளனர்.

இதற்கிடையில், அனிருத் – ஆண்ட்ரியா பற்றிய பல மீம்ஸ்களும் உலா வருகின்றன. இதற்கு பாசிடிவ் ஆகவும், நெகடிவ் ஆகவும் கமெண்டுகள் வருகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT