Wednesday, October 28, 2026

பிக்பாஸ் அனுபவம் பற்றி பவா செல்லதுரை மனம் திறந்தார்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பாதியிலேயே வெளியேறினார். தற்போது, அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து வாவ் தமிழா சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பவா செல்லதுரை பேசியதாவது:

ADVERTISEMENT

“பிக்பாஸ் நிகழ்ச்சியாலும், அங்கு இருந்த போட்டியாளர்களாலும் எனக்கு எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை. அவர்கள் என்னை மிகவும் மரியாதையாகவே நடத்தினார்கள்.”
“வெளியே வந்த பின்னர்தான் எனக்கு ஷாக்காக இருந்தது. வெளியே என்னை பற்றி சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. குறிப்பாக தோல்வி அடைந்த நபர்களின் வன்மம் மிக அதிகமாக இருந்தது.”
“வாழ்க்கை முழுவதும் நான் பாசிட்டிவான மனிதர்களை பார்த்து வளர்ந்தவன். ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது எனக்கு நெகட்டிவான மனிதர்களை அடையாளம் காட்டியது.”
“ஒருவர் என்னை சோம்பேறி என்று அழைத்தார்; அது என்னை மிகவும் வருத்தப்பட செய்ய வைத்து விட்டது. அதனால்தான் நான் அந்த வீட்டிலிருந்து வெளியே வர முடிவு செய்தேன்.”
“நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிறைய பேசலாம், நல்ல உரையாடல்கள் நிகழும் என்று நினைத்தேன். ஆனால், அது முழுக்க முழுக்க ஒரு விளையாட்டு என்பதே அதன் பின்னர்தான் எனக்கு தெரிந்தது.”
“சிறிய வயதிலிருந்தே போட்டிகளில் இருந்து நான் விலகியே இருந்திருக்கிறேன். போட்டிகள் என்றாலே எனக்கு ஒருவித அசெளகரியம் வந்துவிடும். அப்படி இருந்த எனக்கு பிக்பாஸ் வீடே ஒரு போட்டி களமாக இருந்தது.”
“உள்ளே இருந்த பிரதீப்பிற்கு பால்ய காலமானது பயங்கரமாக சிதைக்கப்பட்டிருந்தது. அவரை எங்களால் சமாளிக்கவே முடியவில்லை. அந்த வீட்டில் அவர்தான் ஒவ்வொரு நிமிடமும் கேம் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.”
பவா செல்லதுரையின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT