Wednesday, October 28, 2026

ரம்பாவிடம் அத்து மீறினாரா ரஜினி !ரஜினியை பற்றிய ரம்பாவின் பேச்சால் ஏற்பட்ட சர்ச்சை !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

90-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவரது கட்டழகு ரசிகர்களை கவர்ந்திழுத்தது. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

சமீபத்தில், ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்த ரம்பா, தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், ரஜினிகாந்த் குறித்த ஒரு சம்பவத்தைப் பற்றியும் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

அருணாச்சலம் படத்தில் நடித்தபோது, பாலிவுட்டில் சல்மான்கான் உடன் ஒரு படத்தில் நடித்து வந்தேன். அப்போது மும்பை வந்த ரஜினி, படப்பிடிப்பில் என்னைப் பார்த்துவிட்டு, ஹிந்தி நடிகர்கள் என்றால் கட்டியணைத்து பேசுகிறீர்கள். நாங்கள் மட்டும் என்ன இளக்காரமா என்று கேட்டார்.

அந்த நேரத்தில், நான் ரஜினியின் நகைச்சுவையைப் புரிந்துகொள்ளவில்லை. அவருடன் சண்டை போட்டேன். ஆனால், பின்னர்தான் அவர் என்னிடம் விளையாடிக்கொண்டிருந்தார் என்பதை உணர்ந்தேன்.

ஒரு நாள், படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, திடீரென விளக்குகள் அணைக்கப்பட்டது. அப்போது, என் பின்னால் யாரோ தட்டினார்கள். நான் கத்திவிட்டேன். பின்னர், விளக்குகள் போடப்பட்டபோது, ரம்பாவை தட்டினார் யார் என்று ஒரே களேபரம். ஆனால், அதை செய்தது ரஜினிதான் என்பதை பின்னால்தான் தெரிந்தது.

இந்த சம்பவத்தைப் பற்றி ரம்பா பேசியதைத் தொடர்ந்து, ரஜினியை பிடிக்காத சிலர், #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி என்ற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் எப்போதும் பெண்களை மதித்து நடந்துகொள்வார் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். ரம்பா பேசியது ஒரு நகைச்சுவையான சம்பவம் என்றும், அதைப் பற்றி தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்றும் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் எந்த பதிலும் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT