Wednesday, October 28, 2026

2023ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் வசூல் வேட்டை நடத்திய படங்களின் முழு லிஸ்ட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

2023ம் ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் மோதின. தனித்தனியாக வெளியாகி இருந்தால் இரண்டு படங்களின் வசூல் மேலும், அதிகரித்து இருக்கும்.

தனுஷ் – வாத்தி
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தெலுங்கு இயக்குநர்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், தனுஷுக்கு ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் மற்றும் கருத்துள்ள படத்தைக் கொடுத்து காப்பாற்றியிருந்தார் வெங்கி அட்லூரி. இந்த ஆண்டு இறுதியில் கேப்டன் மில்லர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அந்த படம் வெளியாக போகிறது.

ADVERTISEMENT

அஜித் – துணிவு
வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், எச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்து இந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டியது. விஜய்யின் வாரிசு படத்துக்கு கடும் போட்டியாக அமைந்தது. நடிகர் அஜித்தின் லுக் இந்த படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. விடாமுயற்சி இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என தெரிகிறது. துணிவு படத்தை விட விடாமுயற்சி படம் இப்பவே 250 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படும் நிலையில், படம் வெளியானால் அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் படமாக இருக்கும் என்றும் ஆனால், சோலோவாக வெளியானால் தான் அது சாத்தியம் என்றும் கூறுகின்றனர்.

விஜய் – லியோஇந்த ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ என இரு படங்கள் வெளியானாலும் ரசிகர்களுக்கு முழு திருப்தியை அந்த இரு படங்களும் கொடுக்கவே இல்லை. நடிகர் விஜய்யின் ஸ்டார்டம் காரணமாகவே வாரிசு 300 கோடி வசூலையும் லியோ படம் 600 கோடி வசூலையும் ஈட்டியது. லியோ படத்தின் செகண்ட் ஹஃப் சிறப்பாக அமைந்திருந்தால் இந்த ஆண்டின் நம்பர் ஒன் நடிகராகவே விஜய் மாறியிருப்பார்.

ரஜினிகாந்த் – ஜெயிலர்

பீஸ்ட் படத்தில் பட்ட அவமானங்களில் இருந்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இயக்குநர் நெல்சனுக்கு, அதே போல தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் தோல்வியில் இருந்து மீள வேண்டும், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலுக்கு பதில் சொல்ல வேண்டும் என பல பிரஷர்களுக்கு மத்தியில் பக்கா கமர்ஷியல் மாஸ் படமாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிவராஜ்குமார், மோகன்லால் என முன்னனி நடிகர்களின் கேமியோக்கள் படத்திற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கூஸ்பம்ப்ஸ் தருணங்களாக தியேட்டரில் அலப்பறையை கிளப்பின. 72 வயதிலும் தனது ரசிகர்களுக்காக உழைக்கும் நடிகர் ரஜினிகாந்த் தான் இந்த ஆண்டின் நம்பர் ஒன் ஃபேவரைட் ஹீரோ என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்து இல்லை

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT