சினிமாவில் மொழி தடைகளை உடைத்து, பான் இந்தியா படங்கள் வெற்றி பெறுவது இன்றைய நடைமுறை.
படைப்பாளிகளின் திறமைக்கும், கலைக்கும் இது ஆரோக்கியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, முன்னணி நட்சத்திரங்களை திரட்டி, பல மொழிகளில் படங்களை தயாரித்து வெற்றி பெற்று வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான இது, வரிசையாக பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து முன்னிலையில் இருக்கிறது.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்
அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது.
அஜித் எப்போதும் தனது தயாரிப்பு நிறுவனத்துடன் நல்லுறவில் இருப்பார்.
விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் பொறுப்பற்ற தன்மையால், அதனுடன் தொடர முடியாமல் போனதால், மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்தார் அஜித்.
இயக்குனர் சங்கர் அவர்களும் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைய இருக்கிறார்
இந்த பிரம்மாண்ட இயக்குனருக்கு ஏற்ற நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ராம் சரணின் அடுத்த படம், ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணி போட்டுள்ள NTR 31 படம் என பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர்கள்தான் தயாரிக்கிறார்கள்.
ஹிந்தியிலும் மைத்ரி மூவி மேக்கர்ஸின் ஆதிக்கம் தொடர்கிறது
கிட்டத்தட்ட 5000 கோடிக்கு மேல் திரைத்துறையில் மட்டும் முதலீடு செய்துள்ளது மைத்திரி மூவி மேக்கர்ஸ்.
நவீன், யலமஞ்சிலி ரவிசங்கர் மற்றும் மோகன் செருகுரி போன்ற நபர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த குஷி, அல்லு அர்ஜுனின் புஷ்பா முதல் பாகம் போன்ற பல படங்களை தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. திறமையான படைப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, தரமான படங்களை தயாரித்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
