2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. அவற்றில் முதல் 5 இடங்களில் இருக்கும் படங்களைப் பற்றி பார்ப்போம்.
1. லியோ
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. ஒரு போதை பொருள் கும்பல் லியோ தான் பார்த்திபன் என துரத்துகிறது அதிலிருந்து பார்த்திபன் என்கின்ற விஜய் எப்படி மீண்டும் வருகிறார் என்பதுதான் கதை. படம் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று படம் ஓடியது. ஒட்டுமொத்தமாக சுமார் 650 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
2. ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். வழக்கமான அப்பா – மகன் பாசத்தை எடுத்துரைக்கும் படமாக இருந்தாலும் படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு பலரையும் வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்தது. அதனால் அதிக நாட்கள் ஓடி 615 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
3. பொன்னியின் செல்வன் 2
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இரண்டாவது பாகம் சில மாதங்களிலேயே வெளியானது. இந்தப் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 350 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
4. வாரிசு
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு. படம் முழுக்க முழுக்க அண்ணன் தம்பி மற்றும் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அள்ளியது.
5. துணிவு
அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. படம் அதிரடி ஆக்சன் மற்றும் சமூக கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் படம் சென்றடைந்தது இதனால் அதிக நாட்கள் ஓடி 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த 5 படங்களும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியமான படங்களாக இடம்பெறும். இந்த படங்களின் வெற்றி தமிழ் சினிமாவின் வசூல் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
