Wednesday, October 28, 2026

இணையத்தில் வைரலாகும் தளபதி68 படத்தின் டைட்டில் இதுவா ? வைரலாகும் தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் G.O.A.T என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

இப்படத்தில் விஜயுடன், பிரபுதேவா, லைலா, சினேகா, பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா, மைக் மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடத்தில் நடிக்கிறார். இந்த படம் வில் ஸ்மித்தில் நடிப்பில் வெளியாகி இருந்த ஜெமினி மேன் திரைப்படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் ஒரு வேடத்தில் வயதான ஒரு வேடத்திலும், க்ளோனிங் மகன் என்ற ஒரு வேடமும் இருக்கிறதாம். அதை போல, மகன் வேடத்தில் நடிக்கும் விஜயுக்கு இளமை தோற்றத்துக்காக டி ஏஜிங் ப்ராசஸுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் முதற்கட்ட பட வேலைகளில் படக்குழு கலந்து கொண்டது.

அதில் விஜயிற்கு விஎஃப்எக்ஸ் பணிக்காக நிறைய டெஸ்ட் எடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

சமீபத்தில் இப்படத்திற்கு பாஸ் அல்லது Puzzle என பெயர் வைக்கப்பட்ட இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அந்த டைட்டில் எல்லாம் இல்லை. வெங்கட் பிரபு மேலும் சுவாரஸ்யமான டைட்டில் உடன் வருவார் எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில், தளபதி68 படத்துக்கு G.O.A.T எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறதாம். அதாவது, G.O.A.T என்பது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.

இந்த டைட்டில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த டைட்டில் மிகவும் பொருத்தமாக இருப்பதாக கூறியுள்ளனர். சிலர் இந்த டைட்டில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர்.

இந்த டைட்டில் குறித்து உங்கள் கருத்து என்ன?

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT