Wednesday, October 28, 2026

பிரபாஸ் நடித்த சலார் படத்தை நார் நாரை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் சலார் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பிரசாந்த் நீல் கடைசியாக எடுத்த கே ஜி எஃப் கே, ஜி எஃப் 2 படங்கள் பிளாக் பஸ்டார் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளிவந்து தெலுங்கு, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தமிழில் அந்த அளவிற்கு இல்லை.

படத்தின் கதைக்களம், நடிப்பு, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, சண்டை காட்சிகள் என அனைத்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. குறிப்பாக, படத்தின் சண்டை காட்சிகள் ரொம்ப ஓவராக இருப்பதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர். கிளைமேக்ஸ் காட்சியில் ஜாம்பி சண்டைகள் தேவையில்லை என்றும் கதை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

படம் முதல் நாளில் மட்டுமே 175 கோடி அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ப்ளூ சட்டை மாறன் சலார் படத்தை விமர்சித்துள்ளார்.

“KGF படம் போன்று எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் என்பது படத்தைப் பார்வையில் தெரிகிறது ஆனால் அந்த படத்துக்கு ஈடுகட்ட எல்லாம் இந்த வைக்க முடியாது. படத்தின் முதல் பாதி முழுவதும் ஹீரோ பற்றி பில்டப் இருக்கிறது ஆனால் அது வெத்து பில்டப். படம் கன்றாவியாக இருக்கிறது. பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்டவருக்கு எல்லாம் படத்தில் ஒன்றும் இல்லை. நடிக்கவும் இல்லை. நடிக்க தெரிந்த ஒரே ஆள் பிரித்விராஜ். படத்தில் வேலை இல்லை. எதிரிகள் எல்லாம் மிலிட்டரி டேங்க், மிஷன் கன் ஆகியவை வைத்து சண்டை போடுகிறார்கள் ஆனால் ஹீரோ கோடரி வைத்து சண்டை போடுகிறார்.

கேஜிஎப் படத்தில் பில்டப் இருந்தாலும் அதில் வரும் சீன் எல்லாம் அருமையாக இருந்தன. ஆனால் இதில் அப்படி ஒன்றும் கூட இல்லை. படத்தை இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்தால் வாழ்க்கையில் மூணு மணி நேரம் வீண் தான்” என்று ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

சலார் படம் ப்ளூ சட்டை மாறன் போன்ற சில விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டாலும், பெரும்பாலான ரசிகர்கள் படத்தை மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT