தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித்தின் ஜென்டில்மேன் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புன்னகை அரசி சினேகாவின் அக்கா ஒருவர் அண்மையில் அஜித்தை பற்றி ஒரு பேட்டியில் கூறிய கருத்து இது.
அந்த பேட்டியில், “ஜனா படத்தில் நடித்தபோது அஜித்தை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது என் மகன் சின்ன குழந்தை. அஜித் அவரை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்.
அதையடுத்து பத்து வருடம் கழித்து அவரை ஒரு மாலில் பார்த்தேன். அப்போது, அஜித் புகழின் உச்சத்தில் இருந்தார். இருந்தபோதும், அவர் என்னை பார்த்த உடனேயே எந்தவித தலைக்கணமும் இல்லாமல் எதார்த்தமாக என்னிடம் வந்து என் குடும்பத்தை விசாரித்தார். அது எனக்கு மிகப்பெரிய சங்கடத்தை தந்தது.
எவ்வளவு தான் புகழின் உச்சத்தில் இருந்தாலும் அஜித் எதையும் மறக்கவில்லை. நான் அஜித்தை பார்த்தும், பார்க்காது போல் இருந்தேன். ஆனால், அவரோ எதார்த்தமாக என்னிடம் வந்து பேசியதை இன்று வரை என்னால் மறக்க முடியாது.
என்னை பொருத்தவரை அஜித் என்றுமே ஒரு ஜென்டில்மேனாக திகழ்கிறார். இவரது விடாமுயற்சி படமும் வெற்றி படமாக நிச்சயமாக அமையும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.
அஜித்தின் இந்த செயல் அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தலயினா சும்மாவா?” என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் போட்டு தெறிக்கவிட்டுள்ளனர்.
