Wednesday, October 28, 2026

ஏழை எளிய மக்களின் மதுரை வீர சாமி! விஜயகாந்த் நடந்து வந்த பாதை..!! கண்ணீரில்மூழ்கிய தமிழகம்..!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (2023-12-28) காலை 6.10 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.

விஜயகாந்த் 1952 ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் பிறந்தார். 1978-ஆம் ஆண்டு “பூவே உனக்காக” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு “கருப்பு ரோஜாக்கள்”, “சின்ன சின்ன ஆசைகள்”, “என்ன வேணும்னாலும் வாங்கிக்க”, “எங்கேயும் எப்போதும்”, “அன்பே ஆசையே”, “தலைநகரம்” போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

ADVERTISEMENT

அவர் தன்னுடைய படங்களில் ஊழல், லஞ்சம், சட்டவிரோத செயல்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியது மட்டுமல்லாமல், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தக்கூடிய படங்களையும் நடித்தார்.

அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைஞர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது என்பதை பற்றிய பதிவை இந்த பதிவில் காணலாம். இந்த மாமனிதர் அழகர்சாமி மற்றும் ஆண்டாள் என்பவருக்கு பிறந்தவர். சினிமாவின் மீது கொண்ட அதீத காதலால் சென்னைக்கு வந்தார்.

1979-ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த விஜயகாந்த் தன் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி ரஜினி மற்றும் கமலுக்கு நிகரான அந்தஸ்தை மக்கள் மத்தியில் பெற்று விட்டார்.

எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்ட இவரை அனைவரும் அன்போடு கேப்டன் என்று அழைத்ததோடு, இவரது கொள்கைகளைப் பார்த்து வியந்தார்கள். அனைவரும் சமம் என்று வாய் அளவில் சொல்லாமல் சாப்பிடும் உணவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பசியால் வாடியவர்களின் துயரம் அறிந்து பசியை போக்கியவர்.

சினிமா உலகில் தான் மற்றும் வெற்றி பெற்றால் போதும் என்று எண்ண கூடியவர்களின் மத்தியில் இன்று சூப்பர் ஸ்டார் ஆக மின்னும் விஜய், சூர்யா, வடிவேலு போன்றவர்களை கை கொடுத்து தூக்கி விட்ட அற்புதக் கலைஞர்.

ஒரே ஆண்டில் 18 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிசியான நடிகராக விளங்கியவர். இவர் நடிப்பில் வெளி வந்த வைதேகி காத்திருந்தால், வானத்தைப்போல, கேப்டன் பிரபாகரன், ரமணா போன்ற படங்கள் ஒவ்வொன்றும் சினிமா உலகம் இருக்கும் வரை இவர் பெயர் சொல்லும்.

இவரது புகழுக்கு மகுடம் சேர்ப்பது போல 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று பல வெளிநாடுகளுக்கு கலைஞர்களை அழைத்துச் சென்று, கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தவர்.

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சினிமாவோடு தனது வாழ்க்கையை நிறுத்தி விடாமல், அரசியலில் களம் இறங்கி தேமுதிக கட்சியை ஆரம்பித்து ஒரே ஆண்டில் விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் வெற்றியைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலில் என்ன செய்யப் போகிறார் என்று பேசியவர்களின் வாயை அடக்கும்படி, 29 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து அரசியல் சரித்திரம் படைத்தார்.

அப்படிப்பட்ட மகான் உடல் நலக்குறைவால் இன்று நம்மை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டுவோம்.

கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது.

நேற்று (2023-12-28) அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

விஜயகாந்தின் மறைவு தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மறைவால் ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT