சில நடிகர்கள் ஒரே மாதிரியான கதைகளில் நடித்து வருவார்கள். அப்போதுதான் ஒரு சிறந்த இயக்குனர் அவர்களை வைத்து ஒரு சிறந்த படத்தை கொடுப்பார். அந்த படத்திலிருந்து அந்த நடிகர் மீது ரசிகர்களுக்கு இருந்த இமேஜே மாறிவிடும்.
ரஜினி படம் என்றால் பக்கா மசாலாதான். காமெடி, பாட்டு, வில்லன் என தூள் பறக்கும். ஆனால், அவரை தளபதி திரைப்படத்தில் மணிரத்தினம் காட்டிய விதம் யாரும் அதற்கு முன்பு செய்யாதது. ரஜினி இப்படி கூட நடிப்பாரா என பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருப்பார். ஆனால், அதன்பின்னர் ரஜினி அந்த ரூட்டில் பயணிக்கவில்லை. வழக்கம்போல், தனது ஸ்டைலுக்கு திரும்பிவிட்டார்.
அதேபோல் அர்ஜூன் படமென்றால் கதை பெரிதாக இருக்காது. சண்டை காட்சிகள் மட்டுமே சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்த நேரத்தில் அவரை வைத்து ஜென்டில்மேன் படத்தை கொடுத்தார் ஷங்கர். அதேபோல், முதல்வன் படத்திலும் அர்ஜூனுக்கு நல்ல வேடம் கிடைத்தது. ரசிகர்களிடம் அவருக்கு இருந்த இமேஜும் மாறியது.
அதேபோல்தான் மசாலா படங்களில் நடித்து வந்த தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை கொடுத்தவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் படங்களில் நடித்த பின்னர்தான் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையை வாங்கினார். சினிமா உலகில் சிறந்த நடிகராக தனுஷ் பார்க்கப்பட்டார்.
இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அது வாடிவாசல் படமாக இருக்க வாய்ப்பில்லை. புதிய கதை என சொல்லப்படுகிறது. அஜித் இப்போது ஸ்டைலீஸ் மற்றும் மாஸ் ஹீரோவாக மட்டுமே வலம் வருகிறார்.
ஒருவேளை வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்து அஜித் தனது இமேஜை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. வெற்றிமாறன் ஒரு கதை சொல்லும் இயக்குனர். அவரது படங்களில் கதைதான் முக்கியம். அஜித் வெற்றிமாறன் படத்தில் நடித்தால், அவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும். அதனால், அஜித்தின் நடிப்பு திறமை வெளிப்படும்.
அஜித் ஏற்கனவே பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், அவை எல்லாம் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் படங்கள் அல்ல. வெற்றிமாறன் படங்கள் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம். அஜித் அந்த அனுபவத்தை பெறுவார் என்றால், அது அவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையாக இருக்கும்.
அஜித் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், அது தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த செய்தி. இரண்டு சிறந்த கலைஞர்கள் ஒரே படத்தில் இணையும்போது, அது நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். ரசிகர்களுக்கும் அது ஒரு விருந்தாக இருக்கும்.
