நடிகை அமலா பால் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி தனது நண்பர் ஜகத் தேசாய்யை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். கேரள மாநிலம் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். “இப்போது எனக்குத் தெரியும், 1+1 என்பது உன்னுடன் 3 ஆகும்!” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் ‘நீலத்தாமரா’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து அதிரடி காட்டியிருந்தார். பின்னர் மைனா திரைப்படம் மூலம் பிரபலமான அமலா பால், கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.
விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை, சூர்யாவுடன் பசங்க 2 என கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அமலா பால், இயக்குநர் எ.ஏல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2014 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால், 2017 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இரண்டு மாதங்களிலேயே கர்ப்பம் அடைந்துள்ள அமலா பால், விரைவில் அம்மாவாகப் போகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
