Wednesday, October 28, 2026

பொறுத்தது போதும் அஜித் எடுத்த அதிரடி முடிவு ! மிரளும் திரையுலகம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விடாமுயற்சி படத்துக்காக அஜர் பைஜானில் நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக சூட்டிங் செய்து வரும் நிலையில், துபாயில் உள்ள அவரது புதிய வீட்டில் குடும்பத்துடன் புத்தாண்டு மற்றும் மகள் அனோஷ்காவின் 16 வது பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை கொண்டாடி வந்தார்.

கேப்டன் விஜயகாந்த் திடீரென உடல் நல குறைவு காரணமாக புத்தாண்டுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. ஆனால், அஜித், விஷால், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் வெளிநாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் சென்னை திரும்பி வரும் அவர்கள் விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், சிவக்குமார் உள்ளிட்டோர் சமீபத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.

நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பி உள்ள நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கலைஞர் 100 விழா இன்று மாலை நாலு மணிக்கு கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது நிலையில், அந்த நிகழ்ச்சியிலும் நடிகர் அஜித் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துபாயில் நடிகர் அஜித் நடனமாடிய வீடியோ காட்சிகள், ரசிகர்களின் செல்போனை பிடுங்கி வீடியோக்களை டெலிட் செய்த காட்சிகளும் வைரலான நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு இரண்டு வரி ட்வீட் கூட போட முடியவில்லை துபாயில் இப்படி குத்தாட்டம் போடுவதா என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக இப்படி ஒரு அதிரடி ரூட்டுக்கு அஜித் மாறவுள்ளார் என்கின்றனர்.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால் மட்டுமே தெரிய வரும்.

அஜித்தின் அஞ்சலிக்கு எதிர்பார்ப்புகள்

விஜயகாந்த் மறைவுக்கு அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால், அது அவரது ரசிகர்களுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் பெரும் மகிழ்ச்சியளிக்கும்.

அஜித், விஜயகாந்த் ஆகிய இருவரும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள். இருவரும் தங்கள் தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள்.

விஜயகாந்த், அஜித்தை தனது மகனாகவே பாவித்து வந்தார். அஜித்தின் படங்களின் முன்னோட்டங்கள் வெளியாகும் போது, அவை விஜயகாந்தின் வீட்டில் வீடியோவில் பார்க்கப்படும் என்பது ஒரு பிரபலமான செய்தி.

இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால், அது இருவரது நட்பையும், அஜித்தின் மரியாதை உணர்வையும் காட்டுவதாக அமையும்.

அஜித் அஞ்சலி செலுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்று மாலைதான் தெரியவரும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT