Wednesday, October 28, 2026

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் ட்ரைலர் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இன்று நேற்று நாளை படத்தை முடித்த கையோடு இயக்குநர் ரவிக்குமார் பல வருட உழைப்பை போட்டு உருவாக்கி உள்ள படம் தான் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

அயலான் படம் ஏலியன் படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ஏலியன் படம் இதுதான் என்று அறிவிப்புடன் இந்த படம் தொடங்கப்பட்டது. அந்த காலத்திலேயே எம்ஜிஆர் வேற்று கிரகத்துக்கு செல்வது போல கலையரசி படத்தில் நடித்திருப்பார்.

ADVERTISEMENT

ஆரி அர்ஜுனன் எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என ஒரு ஏலியன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ஏலியன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

டீசரை விட அயலான் டிரெய்லர் மேலும், ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது. அயலான் டிரெய்லரில் ஏலியனுக்கு சித்தார்த் கொடுத்த நிலையில், அவர் பேசும் காட்சிகளும், நானா ஏலியன்.. நீ ஏலியன், உங்க அம்மா ஏலியன், உங்க அப்பா ஏலியன்.. இன்னொரு முறை ஏலியன்னு சொன்னா நான் மனுஷனா மாறிடுவேன் என பேசும் வசனங்கள் எல்லாம் குழந்தைகளை எளிதில் கேட்ச் பண்ண வைத்து விடும் விதமாகவே உள்ளது.

அயலான் டிரெய்லரில் சிவகார்த்திகேயனின் நடிப்பு, ஏலியனின் தோற்றம், விஷுவல் எஃபெக்ட்கள் என அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. குறிப்பாக, ஏலியனுடன் சிவகார்த்திகேயன் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த டிரெய்லரில் சிவகார்த்திகேயன் ஏலியனை நண்பனாக ஏற்றுக்கொள்கிறார். ஏலியனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நட்பு மலர்கிறது. ஆனால், ஏலியனின் வருகையால் உலகில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் என்ன என்பது படத்தின் கதைக்களம்.

அயலான் டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 20 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அயலான் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

படத்தின் சிறப்பம்சங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் ஏலியனின் நடன காட்சிகள்
விஷுவல் எஃபெக்ட்கள்
ஏலியனின் தோற்றம்
படத்தின் கதைக்களம்
படத்தின் எதிர்மறையான அம்சங்கள்

சில காட்சிகள் கொஞ்சம் சிம்பிள் ஆக உள்ளன
ஏலியனின் பேச்சு வசனங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமே பிடிக்கும்

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT