Wednesday, October 28, 2026

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. போட்டிக்கு படங்கள் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட இந்தப் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் அமைதி மற்றும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருந்த ரஜினியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜெயிலர்-2 படத்தையும் நெல்சன் இயக்கவுள்ள நிலையில், அதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து முடித்த ரஜினி, தற்போது ஞானவேல் இயக்கி வரும் தனது 170 படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். லோகேஷ் – ரஜினி கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தை தொடர்ந்து ஜெயிலர் -2 படப்பிடிப்பிற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் க்ளைமாக்சில் அவரது மகன் இறந்துவிடுவதாக காட்டப்பட்டிருந்த நிலையில் 2ஆம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி கதைக்களத்தை நெல்சன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் 2025-ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT