Wednesday, October 28, 2026

அஜித்தின் ரியல் மாஸை பார்த்து வியந்த சிவராஜ்குமார் !அடுத்து அஜித் சார் கூட தான் ! தெரிக்க விடலாமா

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம். அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அஜித்தின் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன் என மனம் திறந்து கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படம் வரும் 12ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது.

கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவராஜ்குமார், தொடர்ச்சியாக ப்ரோமோஷன்களிலும் பங்கேற்றார்.

அப்போது பேசிய சிவராஜ்குமார், “கோலிவுட்டில் அஜித்தை தனக்கு ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார். மேலும், அஜித் படங்கள் ரிலீஸாகும் போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கப் போய்விடுவேன். அன்று எந்த வேலையாக இருந்தாலும் முதலில் அஜித் மூவி தான், ரசிகர்களுடன் ஜாலியாக விசிலடிச்சுப் பார்த்து ரசிப்பேன் என சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

சிவராஜ்குமார் பேசிய இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சிவராஜ்குமார் மற்றும் அஜித் இருவரும் முன்னணி கலைஞர்கள் என்பதால், அவர்களின் ரசிகர்கள் இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT