Wednesday, October 28, 2026

அந்த நிலைமையில் நான் ஆடையின்றி அமர்ந்தேன்!மௌனம் கலைத்த பிரிகிடா சாகா..!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

திறமையான நடிகை பிரிகிடா சாகா, குறும்படங்களில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு, இயக்குனர் பார்த்திபன் இயக்கிய “இரவின் நிழல்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில், அவர் ஆடையின்றி நடித்திருந்தார். இந்த காட்சி குறித்து அவர் சமீபத்தில் பேசியுள்ளார்.

“நான் என் படப்பிடிப்பின் இறுதி ஆண்டில் இருந்தேன். அப்போது, பார்த்திபன் சாரிடம் இன்டர்வியூ செய்வதற்காக துணை இயக்குனராக ஒப்பந்தமானேன். உண்மையில், இரவின் நிழல் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் ஆடிஷனில் நான் கலந்து கொள்ளவில்லை. மாறாக, அந்த ஆடிஷனை கவனிக்கும் மேற்பார்வையாளராக இருந்தேன். நிறைய பேரை ஆடிஷன் செய்தோம். ஆனால், இறுதியாக இந்த கதாபாத்திரத்தை நீயே செய்து விடு என்று பார்த்திபன் சார் கூறினார். இந்த வாய்ப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிங்கிள் டேக் படத்தில் இப்படியான காட்சிகள் நிறைய படத்தில் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயம் இருந்தது” என்று கூறினார்.

ADVERTISEMENT

“ஆனால், ஆடையின்றி அமர்ந்திருந்த போது எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. இந்த காட்சி எப்படி வருமோ என்ற ஒரு வித உருத்தல் இருந்தது. ஆனால், படத்தின் கதை, அந்த காட்சிக்கு முன்னாள் இடம் பெற்ற காட்சிகள், ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை என அனைத்தும் அந்த காட்சியின் என்னை பார்க்கும்போது ரசிகர்களாக ஒரு வித பரிதாப உணர்வும், இப்படி ஒரு இப்படிப்பட்ட பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்கிறது என்ற ஒரு உணர்வு தான் எழுந்தது. தவிர, தவறான எண்ணங்களோ, கவர்ச்சியாக நடித்திருக்கிறேன் என்ற என்னம் எழவில்லை. இதை நான் முன்கூட்டியே கணித்து வைத்திருந்தேன். அதேபோல் தான் நடந்தது” என்று கூறினார்.

பிரிகிடா சாகாவின் இந்த பேச்சு, அவரது திறமை மற்றும் மன உறுதியை வெளிப்படுத்துகிறது. ஒரு சவாலான காட்சியையும், சிறப்பாக நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT