Wednesday, October 28, 2026

நான் ஒன்னும் யோக்கிய சிகாமணி கிடையாது!இமான் பத்தி கேட்கக்கூடாதுன்னு கண்டீசன் போட்ட சிவகார்த்திகேயன்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பேட்டியளித்து வருகிறார்.

அவர் கொடுக்கும் பேட்டியில் அயலான் படத்தை மட்டுமே பேசி வருவதாகவும் இமான் பிரச்சனை குறித்த கேள்விகள் கேட்கப்படாமல் இருப்பது குறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

“இமான் பேசியது எல்லாம் பொய்யோ என்று சிவகார்த்திகேயன் பேட்டியை பார்க்கும் மக்களுக்கு தோன்றும். உண்மை என்னவென்றால் சிவகார்த்திகேயனை பேட்டி எடுக்க அழைப்பு விடுக்கிறார்களோ அவர்களிடம், அயலான் படத்தை மட்டும் தான் கேள்வி கேட்க வேண்டும். மற்ற எதையும் கேட்கக்கூடாது என்று கண்டீசன் போட்டு சத்தியமும் வாங்குகிறார்கள்.

அதன்பின் தான் பேட்டி எடுக்க கூப்பிடுகிறார்கள். இதனால் தான் அவர்களால் அதை கேட்கமுடியவில்லை என்றும் ஏற்கனவே பல கண்டீசன்களை போட்டதாலும் அவர்களால் கேட்க முடியாமல் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்கள் கேட்காததனால் அந்த சம்பவங்கள் எல்லாம் பொய் என்றோ! சிவகார்த்திகேயன் யோக்கிய சிகாமணி என்றோ அர்த்தம் கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் அட்லீ புகழ் பாட காரணம், பாலிவுட் வரை சென்றதால் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தான்.

இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரிடமும் இருந்தும் வெளிப்படையான விளக்கம் கிடைத்தால்தான் உண்மை தெரியவரும். ஆனால், அது நடக்குமா என்பது சந்தேகம்தான்.”

பிஸ்மியின் இந்த பேட்டிக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஏன் இந்த விஷயத்தில் வெளிப்படையாக பேசவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT