Wednesday, October 28, 2026

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை பார்த்து அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை ! மிரண்டு போன ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள இப்படத்தை தளபதி விஜய் பார்த்துவிட்டு புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், “எனது நண்பர், அஜித் கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு, ‘தம்பி, உன் படம் செமையா இருக்கு. நீ ரொம்ப நல்லா நடிச்சி இருக்க. படம் ரொம்ப சூப்பரா இருக்கு. உனக்கு பாராட்டுகள்’ என்று என்னிடம் சொன்னார். அவரது புகழ்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவரது கருத்தை கேட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அஜித்தின் இந்த புகழ்ச்சி கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் எல்டிடிஇ கேப்டன் மில்லர் பற்றிய உண்மை கதையாக இருக்காது. ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இப்படத்தில் ஐட்டம் பாடல் கிடையாது. 60 சதவீதம் கதை மற்றும் 40 சதவீதம் ஆக்‌ஷன் என இயக்குனர் அருண் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஷூட்டிங்கில் தொடங்கி ரிலீஸ் வரை பல பிரச்னைகளை சந்தித்தது கேப்டன் மில்லர் டீம். டிசம்பர் 15ந் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கலுக்கு படம் மாற்றப்பட்டது. அதே நாளில் சிவகார்த்திகேயனின் அயலானும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை சமீபத்தில் பார்த்த அஜித் படம் ரொம்பவே பிடித்து விட்டதாம். இப்படம் வெளியாகி நல்ல ரீச்சை கொடுக்கும் எனவும் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதாக படக்குழு தகவல் தெரிவித்து இருக்கிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT