Wednesday, October 28, 2026

வெளிநாட்டிலிருந்து திரும்பிய விஷால், விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார் நடிகர் விஷால். இன்று (ஜன.09) வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய விஷால், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் ஆர்யாவும் உடன் இருந்தார்.

நினைவிடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தார் விஷால். அதன்படி, அவரது ஆதரவாளர்கள் மூலம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வந்த பொதுமக்களுக்கு விஷால் நேரில் சென்று உணவு வழங்கினார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “விஜயகாந்த் அவர்கள் கலையுலகம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மனிதர் என்று பேர் வாங்கிய ஓர் அரசியல்வாதி, துணிச்சலான அரசியல்வாதி என்று பெயர் வாங்கியவர். பொதுவாக ஒரு நல்ல மனிதர் இறந்த பிறகுதான் சாமி என்று சொல்வோம். ஆனால் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே சாமி என்று அழைக்கப்பட்டவர்.

‘திருமூர்த்தி’ என்ற திரைப்படம். அதில் டைட்டிலேயே அவர் மக்களுக்காக செய்த நல்ல விஷயங்களை காட்டியிருப்பார்கள். அவர் மீட்டுக் கொண்டு வந்த நடிகர் சங்கத்தில் நான் பொதுச் செயலாளராக இருப்பதற்கு அவருடைய உழைப்பும், தைரியமும் தான் காரணம்.

சட்டமன்றமாக இருந்தாலும் சரி, திரைப்படம் ஆனாலும் சரி எல்லா வகையில் மனதில் இடம்பெற்றவர். மதுரை பகுதிகளில் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது அங்கிருக்கும் பெரியவர்கள் விஜயகாந்த் பட ஷூட்டிங்கின் போது அவருடைய குணத்தை பற்றி இப்போதும் பேசுவார்கள்.

அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் நான் சொல்லும் ஒரு வார்த்தை இதுதான். ‘என்னை மன்னிச்சிடு சாமி’ அவ்வளவுதான். நான் அவரது இறுதிச் சடங்கில் அவருடன் இருந்து அவருடைய முகத்தை பார்த்திருக்க வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT