Wednesday, October 28, 2026

அன்னபூரணி படம் நீக்கம், வழக்குப்பதிவு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அன்னபூரணி படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றி பெற்றது. பின்னர், டிசம்பர் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

படத்தை பார்த்த பலர், படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பஜ்ரங்தள் அமைப்பு மற்றும் இந்து ஐடி பிரிவு ஆகிய அமைப்புகள், நயன்தாரா மீது புகார் அளித்தன.

ADVERTISEMENT

இந்த புகார்களின் அடிப்படையில், மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மீரா-பயந்தரைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர், நயா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நயன்தாரா உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, நேற்றைய தினம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது.

அன்னபூரணி படத்தில், நயன்தாரா ஒரு இந்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரம், ஒரு முஸ்லீம் இளைஞருடன் காதல் வயப்படுகிறாள். இந்தக் காட்சிதான், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை இயக்கியவர் நிலேஷ் கிருஷ்ணா. இப்படத்திற்கு இசையமைத்தவர் தமன். படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT