90-களில் பிரபலமான காமெடி நடிகை பிரியங்கா. இவர் கவுண்டமணி, செந்தில், சந்தானம், வடிவேலு போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தியவர். இன்று பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டு ஓரளவு ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் குறித்து மனம் திறந்து பேசி வருகிறார்.
அப்படி கடைசியாக வடிவேலு பற்றி பேசினார். தற்பொழுது நடிகர் அஜித்குமார் பற்றி பேசி உள்ளார்.
பிரியங்கா கூறியதாவது:
“அஜித்குமார் எப்பவும் சூப்பர். அவர் எனக்கு அண்ணா மாதிரி. ஒரு படத்தில் நாங்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. திடீர்னு பார்த்தா அஜித்த காணோம். எல்லாரும் பதறி அடிச்சு தேடிட்டு இருந்தாங்க.
ஒரு கட்டத்துல, சரி அவர் வரட்டும் அதுவரை ரெஸ்ட் எடுங்க என எல்லோரும் கூறிவிட்டார்கள். நானும் எங்க அம்மா கிட்ட போய் உட்கார்ந்து இருந்தேன். எங்க அம்மா என்ன வந்துட்ட என கேட்க, படத்தோட ஹீரோ அஜித் சார் காணோம் என சொன்னேன்.
ஓ அப்படியா இந்தா படுத்திருக்காருன்னு சொன்னாங்க. அஜித் ஒரு துணிய மூஞ்சில போட்டு புல்லு மேல படுத்து தூங்கிட்டு இருந்தாரு. யாருகிட்டயும் சொல்லாதீங்கன்னு எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு படுத்து இருக்காரு.
அஜித் மிகவும் சிம்பிள் பையன். படப்பிடிப்புக்கு லேட் ஆகுறதுக்கு முன்னாடி அவர் எங்க அம்மாவிடம் சொல்லிட்டுதான் போவாரு. அதுவும் யாருகிட்டயும் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டு போவாரு” என்று பிரியங்கா கலகலப்பாக பேசினார்.
பிரியங்காவின் இந்த பகிர்வை கேள்விப்பட்ட ரசிகர்கள் வேற லெவல் எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.
