விடாமுயற்சி என்பது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அஜித், மகிழ்திருமேனி உட்பட படக்குழுவினர் ஏற்கனவே அந்நாட்டிற்கு சென்று விட்டதாக கூறப்பட்டது.
இந்த படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா மற்றும் ஆரவ் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், அஜித்குமார், த்ரிஷா மற்றும் ஆரவ் ஆகியோர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பின் உருவாக இருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடத்தப்படும் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பிய பின்னர் வட இந்தியாவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் அஜித்குமாரின் 63வது படமாகும். இப்படம் அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் என்டர்டெய்னர் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்படுகிறது.
பிரியா பவானி சங்கர் படத்தில் இணைவார்?
இந்நிலையில், அஜித்குமார், த்ரிஷா மற்றும் ஆரவ் ஆகியோர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் அஜித்குமார், த்ரிஷா மற்றும் ஆரவ் ஆகியோருடன் அஜர்பைஜானில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அஜர்பைஜானில் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதனால், பிரியா பவானி சங்கர் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனவே, பிரியா பவானி சங்கர் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைவார் அல்லது தற்செயலாக அஜர்பைஜானுக்கு சுற்றுலா சென்றுள்ளாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மோகன்ராஜாவின் அஜித் படம்
இந்தநிலையில், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் மோகன்ராஜாவிடம் அஜித்தை வைத்து ஏன் இன்னும் படம் இயக்கவில்லை என்று கேட்டனர்.
அதற்கு அவர், “நான் எப்போதும் ஒரு முறை கதை சொல்ல போனால் கண்டிப்பாக அவர் ஓகே சொல்ல வேண்டும் என்று எண்ணத்தில் இருகிறேன். நான் அந்த அளவிற்கு அவரை கவர வேண்டும், அஜித் சாருக்காக இதுவரை யாரும் யோசிக்காத கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்துள்ளேன். கண்டிப்பாக அவரிடம் ஒரு நாள் கதை சொல்லி ஓகே அவரிடம் ஓகே வாங்கியே தீருவேன் என்று கூறினார்
