Wednesday, October 28, 2026

புதுச்சேரியில் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார். அத்துடன் நடிகர் பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இது பான் இந்தியா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கோயிலில் வழிபடுவது போலவும், குளத்திற்கு செல்வது போன்ற காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. இந்த நிலையில் ரஜினி கோயிலுக்கு வந்துள்ள தகவல் அறிந்ததும் ரசிகர்கள் அங்கே பெருமளவில் கூடினார்கள்.

கோயிலிலிருந்து வெளியே வந்த ரஜினி, திறந்த காரில் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்தின் படப்பிடிப்பு வீடியோக்களைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் புதுச்சேரியில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT