கேரள திரையுலகின் வெரைட்டி ஆக்டராக விளங்குபவர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் ஜகமே தந்திரம், பபூன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் ஆண்டனி திரைப்படம் கடைசியாக வெளியானது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை அல்ட்ரா மீடியா மற்றும் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
ஜோஷி இயக்கிய இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா, ஆஷா சரத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் பெற்றிருந்தது.
இந்நிலையில், ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை அல்ட்ரா மீடியா மற்றும் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜோஜு ஜார்ஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், டிஜிட்டல் உரிமையை அதிக தொகைக்கு விற்பனை செய்துள்ளது படக்குழுவிற்கு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஜோஜு ஜார்ஜின் சினிமா கரியரில் அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமை விற்ற படம் என்றால் அது ஆண்டனி படம்தான் என்று கூறப்படுகிறது.
