Wednesday, October 28, 2026

ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!ரசிகர்கள் கொண்டாட்டம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்தின் 62வது படமாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம், திரைக்கு வந்த பிறகு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். மேலும், அர்ஜுன், ஆரவ் ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

விடாமுயற்சி திரைப்படம் மே 1, 2024 அன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தப் படம் திரைக்கு வந்த பிறகு, 60 நாட்கள் கழித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தநிலையில், ஏகே 63 பட பூஜை நடைபெற்றுள்ளது அஜித் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெருத்த தொகை கொடுத்து வங்கியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துஉள்ளது இதோ

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வந்த அஜித், இனி வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க முடிவு செய்துள்ளார்.

அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் மே 1 அன்று அஜித்தின் பிறந்தநாளன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படம் முடிந்ததும், அஜித்தின் 63வது படமான ஏகே 63 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

அஜித் இதுவரை ஒரு வருடத்தில் ஒரு படம் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். அஜித்தின் ரசிகர்கள் மீதுள்ள அன்பையும், அவர்களுக்கு அவர் கொடுக்க வேண்டிய கடமையையும் உணர்ந்து, வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க முடிவு செய்துள்ளார்.

அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அஜித்தின் ரசிகர்கள், இந்தப் புதிய முடிவுக்கு அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த முடிவு, நடிகர் விஜய்யின் சினிமா பிரேக் முடிவை எந்த அளவில் பாதிக்கும் என்பது இனி தான் தெரியும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT