Wednesday, October 28, 2026

யப்பா போடுடா வெடிய 🔥 அஜித்தின் ஆட்டம் ஆரம்பம்​ !!விடாமுயற்சி படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. திரையரங்கத்தில் படம் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் படத்திலிருந்து வெளியேற மகிழ் திருமேனி தனது கதையுடன் இந்தப் படத்துக்குள் வந்தார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து இப்படத்திலிருந்து தயாரிப்பு நிறுவனமான லைகா விலக உள்ளதாக தகவல் பரவியது. மேலும், இப்படம் கைவிடப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து வதந்திகளுக்கு லைகா நிறுவனம் முற்றுப் புள்ளி வைத்தது.

தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் ‘The GOAT’, ரஜினியின் ‘வேட்டையன்’, சூர்யாவின் ‘கங்குவா’ உள்ளிட்ட பெரிய படங்களின் போஸ்டர்கள் வெளியான நிலையில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ தொடர்பாக அப்படியான போஸ்டர்கள் எதுவும் வரவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படி ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் மகிழ் திருமேனி கில்லி என்பதால் அஜித்தை வைத்து அவர் எந்த மாதிரியான ஆக்‌ஷன் படத்தை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்துவந்தது. தற்போது இரண்டு ஷெட்யூல்கள் படத்தின் ஷூட்டிங் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தும் இந்த இரண்டு ஷெட்யூல்களிலுமே நடித்துவிட்டார். தற்போது அவர் குட்டி ரெஸ்ட் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT