Wednesday, October 28, 2026

மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்தார்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கடந்த மாதம் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு தொழிலதிபர் ஒருவரிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டது.

ADVERTISEMENT

அதில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற மக்களவை தலைவர் மஹுவா மொய்த்ராவை டிச.8ம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா, தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஜன.7-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்யும் அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது.

ஆனால், அரசு பங்களாவை மஹுவா காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில், இதற்கு விளக்கம் கேட்டு மீண்டும், மீண்டும் அரசு எஸ்டேட் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தநிலையில், அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று மஹுவா மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

இதையடுத்து, அரசு பங்களாவில் இருந்து மஹுவாவை வெளியேற்ற, அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பியது.

இந்தநிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, புது டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.

மஹுவா மொய்த்ராவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவின் எண் 9B டெலிகிராப் லேன் இன்று காலை 10 மணிக்கு முழுமையாக காலி செய்யப்பட்டு, எஸ்டேட் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிகாரிகள் வருவதற்கு முன்பே பங்களா காலி செய்யப்பட்டது, எந்த வெளியேற்றமும் நடைபெறவில்லை எனவும் மொய்த்ராவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹுவா மொய்த்ராவின் அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றம் குறித்த முக்கிய அம்சங்கள்

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு தொழிலதிபர் ஒருவரிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற மக்களவை தலைவர் மஹுவா மொய்த்ராவை டிச.8ம் தேதி பதவி நீக்கம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, மஹுவா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஜன.7-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
மஹுவா பங்களாவை காலி செய்யாமல் இருந்ததால், அவரை வெளியேற்ற அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டது.
அதிகாரிகள் வருவதற்கு முன்பே மஹுவா பங்களாவை காலி செய்தார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT