கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கிலும் பெருந்தொற்று நோயாக உருவாகி, பல லட்சம் உயிர்களை பறித்தது. இந்த வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை ஆவணங்களில் வெளியாகியுள்ள தகவல்கள், கொரோனா தோற்றம் குறித்த புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
அந்த ஆவணங்களின்படி, சீன ஆய்வாளர்கள் கடந்த 2019 டிசம்பர் 28ஆம் தேதியே கொரோனா வைரஸின் முழுமையான டிஎன்ஏ வரிசையை இணையத்தில் இருக்கும் ஒரு டேட்டா பேஸ்களில் பதிவேற்றியதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2020 ஜனவரி 11ஆம் தேதி தான் சீன அதிகாரிகள் இது குறித்து உலக சுகாதார மையத்தில் தெரிவித்துள்ளனர்.
இதன் பொருள், கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவ ஆரம்பிக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே, சீனாவில் அதன் டிஎன்ஏ இருந்துள்ளது.
இந்த தகவல்கள் சீனாவின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றன. கொரோனா குறித்து முன்கூட்டியே தெரியாது என்று சீனா தொடர்ந்து கூறி வந்துள்ளது. ஆனால், இந்த ஆவணங்கள் அதற்கு முரணான தகவல்களை வழங்குகின்றன.
முன்கூட்டியே கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் சீனாவுக்கு இருந்திருந்தால், உலக நாடுகள் அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். இதனால், பல லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும்.
இந்த தகவல்கள் குறித்து சீனாவின் பதிலை கேட்டு பார்க்க வேண்டும். கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பது குறித்த உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
முதல் பதிவு செய்த டாக்டர் லிலி ரென்
2019இல் கொரோனா டிஎன்ஏவை பகிர்ந்தவர் சீன ஆய்வாளர் டாக்டர் லிலி ரென். அவர் அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனம் கேட்ட போதிலும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அந்த தரவுகள் இணையத்தில் இருந்து திடீரென அகற்றப்பட்டன. அவை மீண்டும் லிலி ரென் பெயரில் வெளியாகவே இல்லை.
அதேநேரம் 2020 ஜனவரி 12ஆம் தேதி வேறு ஒரு ஆய்வாளர்கள் பெயரில் அமெரிக்கத் தேசிய சுகாதார தளத்தில் கொரோனா டிஎன்ஏ பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் பதிவு செய்த டாக்டர் லிலி ரென் என்பவர் யார்? அவரிடம் அந்த டிஎன்ஏ எப்படி இருந்தது? அவர் எதற்காக அந்த தகவல்களை நீக்கினார் என்பது தொடங்கி பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த உண்மையை கண்டுபிடிக்க, இந்த கேள்விகளுக்கு பதில் கிடைப்பது அவசியம்.
