Wednesday, October 28, 2026

ப்பா வெறித்தனம் ! பிரம்மாண்ட இயக்குனருடன் கைக்கோர்த்த அஜித் ! 100 % உறுதியான செம மாஸ் கூட்டணி !எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் பிரசாந்த் நீல் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடையும் முன்பே, அடுத்த இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இந்த இரண்டு படங்களை விடவும், அஜித்தின் ஏகே 65 படம் தான் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

உக்ரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் நீல், அடுத்தடுத்து கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குநராக விஸ்வரூபம் எடுத்தார். சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வெளியாகி மரண மாஸ் ஹிட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீலும் அஜித்தும் சேர இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது சம்பந்தமாக இன்று இணையத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. பிரசாந்த் நீல் ஜுனியர் என்.டி.ஆரின் 31வது படத்தையும் அடுத்ததாக கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தையும் அதற்கு அடுத்த படியாக சலார் இரண்டாம் பாகத்தையும் முடித்த பிறகு அஜித்துடன் கூட்டணி வைப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

அதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித்தின் கெரியரில் பிரசாந்த் நீல் படம் மிக முக்கிய படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

கேஜிஎஃப் 3, சலார் இரண்டாம் பாகம் என பிரசாந்த் நீல் லைன்-அப் பெரிதாக இருந்தாலும், அஜித் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அஜித்துடன் இணைய முடிவு செய்துள்ளாராம் பிரசாந்த் நீல்.

அஜித் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணி அமைந்தால், கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை முறியடிக்கும் படமாக ஏகே 65 இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT