Wednesday, October 28, 2026

விஜயகாந்தை நினைத்து வடிவேலு அழுதிருப்பார்! சரத்குமார் பேச்சு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரண்டரை மாதங்கள் கழித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று (ஜனவரி 19) சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், நடிகர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார்.

தனது பேச்சில், சரத்குமார் கூறியதாவது:

ADVERTISEMENT

“இப்படியான ஒரு கூட்டத்தில் நாம் எல்லாம் கலந்துகொள்வோம் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. கேப்டன் விஜயகாந்த் மறைவு மிகப்பெரிய ஒரு இழப்பு. நானும் கேப்டனும் இணைந்து ‘புலன் விசாரணை’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு ஒரு முறை பலமாக அடிபட்டுவிட்டது.

பிறகு என்னை ஓய்வு எடுத்து விட்டு பிறகு படப்பிடிப்புக்கு வாருங்கள் என்று விஜயகாந்த் கூறினார். ஆனால்,நான் அதனை கேட்காமல் காயத்தில் மருந்து போட்டு விட்டு திரும்பி படப்பிடிப்பிற்கு வந்தேன். அப்போது விஜயகாந்த் என்னிடம் கடிந்து கொண்டார். அதன் பிறகு புலன் விசாரணை திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு எனக்கு தான் முதலில் பெயர் கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார். அந்த அளவிற்கு ஒரு பெருந்தன்மை யாரிடம் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடமிருந்து நாம் வள்ளல் குணம் மற்றும் பணிவு என பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்” என்றார்.

மேலும் பேசிய சரத்குமார், “விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகர், அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு அருமையான மனிதர். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு.

விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வரவில்லை என்று சிலர் என்னிடம் கேட்டர்கள். வடிவேலு வரவில்லை உண்மை தான் ஆனால், விஜயகாந்த் குறித்து வடிவேலு தன்னுடைய வீட்டிலே அழுது இருக்கலாம். வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு உணர்ச்சிவசப்பட்ட மனிதர்.

விஜயகாந்த் மறைவால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். அவர்களின் துயரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம். விஜயகாந்த் என்றென்றே நம் நெஞ்சில் வாழ்வார்” என்றார்.

சரத்குமாரின் பேச்சு கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT