கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ நவம்பர் 6ஆம் தேதி கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதில் கமல் ஹாசன், “என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன்” என்று கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன.
இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர்.
இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் பற்றிய புதிய தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி 22ஆம் தேதி கமல் ஹாசன் போர்ஷனுக்கான ஷூட்டிங்கை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் படத்தின் ஷூட்டிங்கை மே மாதத்துக்குள் ஒரேகட்டமாக முடித்துவிட மணிரத்னத்துக்கு கமல் ஹாசன் கண்டிஷன் போட்டிருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. இதனால் படப்பிடிப்பு பணிகள் ஜரூராக தொடங்கவிருக்கிறது.
கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியின் படங்கள் எப்போதும் எதிர்பார்ப்புக்குரியவை. இந்தப் படமும் அதேபோல் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
