தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சமீபத்தில் அதிக கிசுகிசுவில் சிக்கி இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் செய்யப் போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், இந்த வதந்திக்கு விஜய் தேவரகொண்டா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவோ, அல்லது திருமணம் செய்து கொள்ளவோ இல்லை. ஊடகங்கள் தான் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம் செய்து வைக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்தியை நான் கேட்டு வருகிறேன். அவர்கள் என்னை கையோடு கை பிடித்து திருமணம் செய்து வைக்க இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் நான் ராஷ்மிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை” என்றார்.
இதன் மூலம் இருவரும் இணைத்து வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய் தேவரகொண்டா.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், விஜய் தேவரகொண்டாவின் மறுப்பு அவர்களை ஏமாற்றியுள்ளது.
